Press "Enter" to skip to content

About Us

ஆசிரியர் மடல்

வந்து விட்டோம் நமக்காக ... வரவேற்று வாழ்த்துங்கள்

அன்புள்ள கரூர் வாழ் சொந்தங்களே வணக்கம்.
உங்கள் கரங்களில் தவழும் இந்த (கரூர் டைம்ஸ்) இதழ் உங்களுக்காக உங்களில் ஒருவரால் தொடங்கப்படும் உங்கள் இதழ். வாசகர்களே இனி வாரம் தொறும் வண்ணமயமாக விலையின்றி உங்கள் கரங்களில். !!!

உலக மயமாதலுக்குப் பிறகு உலக ம் சுருங்கிவிட்டது, தகவல் தொடர்பு நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டதுதானே? ஆம்... உலகளாவிய பார்வை ,உலகையே ஒரு ஊராக நினைக்கும் அணுகுமுறை ... எல்லாமே சரிதான். ஆனால், வேரினை மறந்திடலாமா?
இல்லை .. மறந்துதான் விடமுடியுமா?

நமது கரூர், காற்று, மண், பாரம்பரியம், கலாச்சாரம், உணவு, பழக்க வழக்கங்கள், விழாக்கள், வியப்பூட்டும் விஷயங்கள் என எண்ணற்ற பெருமைகளை உள்ளடைக்கியது. காலத்தோடு மாறி இன்று பொருளாதார ரீதியாக வளர்ச் சி பெற்று இருப்பினும். நமது பாரம்பரியத்தையும். மனிதத்தன்மையையும் காத்து மனித உறவுகளைப் போற்றி திகழ்கிறது. இன்றைய உலகில் தன் தனித்தன்மையை இழக்காமல் நவீனமயமாகிவரும் நகரங்களில் நமது ஊரான கரூரும் ஒன்று.
இச்சிந்தனையில் உதித்ததுதான் நம் ஊருக்காக தொடங்கியிருக்கும் இந்த (கரூர் டைம்ஸ்) இதழ்.

நம் ஊர், நம் மக்கள், நம் கலாச்சாரம், வரலாறு, சாதனைகள் , வசதி வாய்ப்புக்கள், பொருளாதாரம், மனிதவளம், மகளிர், கலை, வேளாண்மை , ஆன்மீகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், சினிமா, உலக நடப்பு, விளையாட்டு எனப்பலவற்றையும் பதிவுசெய்யும் இதழாக இருக்கும் கரூர் டைம்ஸ்.

இதைத் தொடங்குவது மட்டும்தான் நாங்கள். இந்த இதழைத் தொடர்ந்து நடத்திச் செல்லப்போவது நீங்கள்தான் இந்த இதழை உருவாக்கும் பணியை கடந்த 30 ஆண்டுகளாக உலகின் ஒரு மிக சிறந்த ஆங்கில நாளிதழில் பணிபுரிந்து தற்போது முக்கிய தமிழ் நாளிதழின் உருவாக்கத்திலும் அதை வளர்த்தெடுப்பதிலும் பெரும்பங்கு வகித்தவர் . இதழியல் வடிவமைப்பு, அச்சுக் கலை, உள்ளடக்கம் ஆகியவற்றில் செழுமையான அனுபவம் கொண்டவர் . பரவலான வாசிப்பும் அரசியல், இசை , சினிமா, கிரிக்கெட் , தொழில்நுட்பம், மொழி எனப் பல துறைகள் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். நம் மாவட்டத் தில்தான் பிறந்து வளர்ந்து ஆரம்பக் கல்வி கற்றவர்.

வாசகர்கள் – ஆசிரியர் குழு என்னும் வேறுபாடுகளைக் களைந்து இணைந்து நாம் கரூர் டைம்ஸ் இதழை நடத்துவோம். உங்கள் சிந்தனைகளை , உங்களுக்கு முக்கியம் என்று படும் விஷயங்களை கரூர் டைம்ஸ்ல் எழுதுங்கள். உங்கள் யோசனைகளைச் சொல்லுங்கள். கரூர் டைம்ஸ்ல் கரூர்க்க கான இதழாக, வலுவான பயணத்தை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியபடுத்துங்கள். கரூரின் ஜீவன் கருர் டைம்ஸில் இழையோடட்டும்.

நாம் அனைவரும் இணைந்து இதழை கரூரின் மறக்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக மாற்றுவோம்.

அன்புடன்
ஆசிரியர்

ஆசிரியர் மடல்

ஏகோபித்த வரவேற்புக்கு இதயம் கனிந்த நன்றி

உங்கள் கரங்களில் இருக்கும் இவ்விதழ் இரண்டாம் இதழ் . அனைவரின் ஏகோபித்த வரவேற்புடனும், வாழ்த்துக்களுடனும் முன்னேறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

முதல் இதழ் நம் மாவட்டத்தில் சற்று ஏறக்குறைய லட்சத்தி இருபத்தைந்தாயிரம் வாசகர்களை சென்று அடைந்தோம் என்ற மன நிறைவுடன் இம்மடலை எழுதுகிறோம்.

நாமக்கல் மாவட்டத்திற்காக நாமக்கல் பிளஸ் , கரூர் மாவட்டதிற்காக கரூர் டைம்ஸ் என்ற பெயர்களில் உங்களை சந்திததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்களின் பங்கேற்பை மிகவும் எதிர்பார்த்து ஊக்குவிக்க காத்து இருக்கிறோம். தங்கள் பகுதியில் எல்லா நிகழ்வுகளையும் புகைபடத்துடன் பகிருங்கள். மாவட்டம் முழுவதும் அறியப்படுத்த ஏதுவாயிருக்கும்.

எழுத்தார்வம், திறமைகள் எந்த துறையாயிருப்பினும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். சில துறைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

(அறிவியல், ஆன்மீகம், வேளாண்மை, மகளிர், தொழில், வணிகம், தொழில் நுட்பம், மாணவர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, வாகன பராமரிப்பு, கம்ப்யூட்டர், சிறு தொழில், மனித வளமேம்பாடு, மொழி, மொழிபெயற்பு, அறிவியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், வானியல், வணிகர் மேம்பாடு, சுய தொழில் முனைவு, சோதிடம், வருமானம், உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, யோகா, சமையல், ரியல் எஸ்டேட், கட்டிட கலை, அழகு கலை, பேக்ஷன், மகளிர் அழகு, மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்த மருத்துவம், அக்குபங்சர், அக்குபிரஷர் போன்றவை)

வாசகர்களுக்கு விலையில்லாமலும்,
விளம்பரதாரருக்கு அவர்களின் விளம்பரம் மாவட்டம் முழுவதும் சென்று அடைந்து பயன் பெறவும் உறுதி பூண்டு உழைக்கிறோம்.

எழுத்தாளர்களே, ஓவியக்கலைஞகளே, கவிஞர்களே |புகை படம் எடுப்பவர்களே, மகளிரே, மாணவ செல்வங்களே வாருங்கள் , நம் இதழ் வாயிலாக உங்கள் கனவுகளுக்கு தளம் அமைத்து தருகிறோம். படைப்புகளை அளியுங்கள். பார் அறிய செய்கிறோம்

என்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும்

அன்புடன்
ஆசிரியர்